Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

How would you feel if you suffered a stroke and were left paralyzed? Then later discovered that if you had been aware of early signs of stroke, paralysis could have been avoided? This column might help to prevent this tragedy. Moreover, the good news is that surgery is superior to anti-clotting drugs for treatment of this devastating event. A report in the New England Journal of Medicine shows that surgery, rather than TPA, a clot…

Read More

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள்’ என்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கைய நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால்கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க தாங்கள் முடிவு எடுத்திருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். அரசியல் தர்க்கத்துக்கு உட்பட்ட…

Read More

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு டிடிவி தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை அதிகாரி வினய்குமாருக்குப் புகார் கடிதம் வந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் கூட்டாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூரு, பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்புப்…

Read More

அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்

அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினை விடத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கி றார். மேலும், ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத் தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிகபட்ச பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, கலாம் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ல் பிரதமர் நரேந்திர…

Read More

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தை கண்டு ரசிக்க மண்டபத்தை நிரப்பிய வண்ணம் அமர்ந்திருந்த சபையோர் மத்தியில் நாமும் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்டிய நாடகத்தின் ஒருபகுதி புகைப்படங்கள் இங்கு தோற்றமளிக்கின்றன. சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கெடுத்த “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தில் இராமனாக பாத்திரமேற்று நடனமாடியும் நடித்தும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்ற தாமிரா குமார் அரங்கேற்றம் கண்ட சிரேஸ்ட மாணவி, அத்துடன் சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின்…

Read More

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

காலை தொடங்கி மதியத்திற்கு சற்ற பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார். ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்தார். இரதோற்சவத்தின் உபயகாரர் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். சுமார் 15000 பக்தர்கள் இன்றைய இரதோற்சவத்தைக் கண்டு களிக்கவும் உருகி வணங்கவும் வந்திருநதார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

Read More

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் “இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது. மேற்படி இதழின் அட்டையை அலங்கரிப்பவர், கனடா நாட்டில் ரெக்னோ மீடியா என்னும் பெயரில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை நடத்திவரும் மேற்படி நிறுவனத்தின் அதிபர் திரு மதன் சண்முகராஜா ஆவார். உள்ளே இவர் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை வடித்துள்ளார் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” ஆலோசனைக் குழுவில் கனடா நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்பவருமான திரு ஆர். என. லோகேந்திரலிங்கம். இன்று தமிழ்நாட்டிலிருந்து “இனிய நந்தவனம்” ஆசிரியர் திரு சந்திரசேகரன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட யூலை மாத இதழ்கள் சிலவற்றை இன்று…

Read More

அதிமுக இரு அணிகளும் டெல்லியில் முகாம்: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – முதல்வர் கே.பழனிசாமி இன்று சந்திக்கிறார்

அதிமுக இரு அணிகளும் டெல்லியில் முகாம்: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – முதல்வர் கே.பழனிசாமி இன்று சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் 6 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை நேற்று சந்தித்து நீட் தேர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தினர். தொடர்புடையவை இதற்கிடையே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக…

Read More

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேற திட்டம்?

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேற திட்டம்?

ஓ.பி.எஸ். அணிக்கு 11 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று அந்த அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இது ஓ.பி.எஸ். அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இதற்கிடையில் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். இந்த நெருக்கடி பற்றி ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து மேலும் 4 பேர் வெளியேற முடிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரான முன்னணி எம்.எல்.ஏ., மற்றும் ஒரு பெண் எம்.எல்.ஏ….

Read More

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த இடம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுப்புராஜ் கிணற்றை வழங்க முடியாது. வேண்டுமானால் 20 செண்ட் நிலத்தை மட்டும் தருகிறேன். அதில் கிணறு வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள்…

Read More
1 326 327 328 329 330 425