மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது…
Read More









