போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ்

போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாகபோராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்குநேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்துவந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஅளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சிலஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சிலஇடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது. இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது… “அரசுகள்உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும்தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளேநீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்…

Read More

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

வாஷிங்டன், டிரம்ப் மீது குற்றச்சாட்டு அமெரிக்க நாட்டின் 45–வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) கடந்த 20–ந் தேதி பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்பாகவே அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக பெண்கள், குடியுரிமை, முஸ்லிம்கள் தொடர்பான அவரது பார்வையும், கருத்துகளும் கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் மோசமாக பார்க்கிற நடத்தை கொண்டவர் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 10–க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். வாஷிங்டனில் பேரணி இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவர் பதவி ஏற்ற பின்னரும் அவருக்கு எதிராக பல தரப்பினரும்…

Read More

அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு

அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்….

Read More

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

புதுடெல்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் கலைந்து செல்ல கோரியதை அடுத்து சென்னையில் சில அசம்பவாவித சம்பங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது, விமர்சனங்களும் எழுந்தது. இச்செய்தியானது தவறாக பரப்படுகிறது என செய்தியாளர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மேனகா காந்தி எதிர்ப்பு என்ற செய்தியானது முற்றிலும் பொய்யானது என மற்றொரு மத்திய மந்திரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவு படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா…

Read More

இந்த வார (01/20/2017) இ-பேப்பர்

இந்த வார (01/20/2017) இ-பேப்பர்

இந்த வார (01/20/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

தாரள சிந்தை கொண்ட “மின்னல்” செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது

தாரள சிந்தை கொண்ட “மின்னல்” செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது

கனடாவில் வாழ்ந்து கொண்டு தனது தாரள சிந்தையால்  அனைவரையும் கவர்ந்துள்ள “மின்னல்” செந்தில் குமரனின் முயற்சியால் இதய நோயினால் பாதிக்க்பட்ட இலங்கையில் கிழக்கு மாகாண கிராமமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அமுத செல்வியின் உயிர் காப்பாற்றப் பட்டது. இங்கே காணப்படும் படங்களில் அவருக்கான இதய சத்திர சிகிச்சை வைத்தியசாலை மேற்கொள்ளப்பட்டதை இங்கே காணப்படும் படம் மூலம் அறியலாம். மேற்படிஉயிர்காக்கும் திட்டத்திற்கு 14000 ஆயிரம் டொலர்களை விருப்பத்தோடு வழங்கி உதவிய கனடா வாழ் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் திரு.செந்தில் குமரன் நன்றி தெரிவிக்கின்றார். அவரை வாழ்த்த விரும்புவோர் 416 200 7652 என்றும் இலக்கத்தை அழைக்கவும்.

Read More

ஓன்றாரியோ குயின்ஸ்பார்க் வளாகத்தில் மாகாண லிபரல் அரசு நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்

ஓன்றாரியோ குயின்ஸ்பார்க் வளாகத்தில் மாகாண லிபரல் அரசு நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்

நேற்று முன்தினம் புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர்.  முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்விஅமைச்சர் திரு குரு குலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்விஅமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முதல்வர்…

Read More

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார்.  நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

Read More

கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை

கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை

– கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார் செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார். கனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….

Read More

இலங்கையில் தொடரும் “இணக்கமற்ற”தன்மைக்கிடையில் தமிழர் தரப்பு போராடுகின்றது.

இலங்கையில் தொடரும் “இணக்கமற்ற”தன்மைக்கிடையில் தமிழர் தரப்பு போராடுகின்றது.

இலங்கையில் மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனைகள் அற்ற ஆதரவின் பலா பலன்களை எமது சமூகம் சாதகமற்ற விதமாகவே அனுபவித்துள்ளது. இந்த விடயத்தை சாதாரண அரசியல் பார்வையற்ற தமிழ் மக்கள் கூட புரிந்துகொள்வார்கள். இவ்வாறு இருந்தும் தமிழர் தரப்பு தொடர்ச்சியான போராட்டங்களை ஜனநாயக வழிகளில் தொடர்ந்தும் நடத்தி வருகின்றது. உதாரணமாக நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள “எழுகதமிழ்” எழுச்சி  நிகழ்விற்கு கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, அண்மையில் கனடாவிற்கு வருகைதந்த முதலமைச்சர் நீதியரசர்  விக்னேஸ்வரன் அவர்கள் கூட “எழுகதமிழ்” எழுச்சி நிகழ்வுக்கு தொடர்ச்சியான தனது ஆதரவை வழங்கிய வண்ணம்…

Read More
1 393 394 395 396 397 425