ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் பீட்டாவுக்கு தடை கோரியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே 5000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் கைதானவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 2 கோரிக்கைகள்: அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2 கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஒன்று, கைது செய்யப்பட்ட ஊர் மக்கள் 10 பேர் உட்பட 238 பேரை உடனடியாக விடுவிக்க…
Read More









