கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!
இன்னும் இரண்டு வாரங்களில் எமக்காக புத்தாண்டு 2017 பிறக்கப்போகின்றது. புத்தாண்டில் புதியவை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் அனைவரும் வாழ்வில் காத்திருப்பதுண்டு. புதிய வருடத்தில் என்னதான் எமக்கு கிட்டப்போகின்றது என்று எண்ணியிருந்த கனடாவாழ் தமிழ் மக்களை சந்திக்க தாயகத்திலிருந்து வடக்கின் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் எங்கள் புலம் பெயர் மண்ணுக்கு வருகின்றார் என்ற நற்செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவரது விஜயம் தொடர்பான விரிவான செய்தி எமது இவ்வார உட்பக்க மொன்றில் காணப்படுகின்றது. தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் எமது உறவுகளில் பலர் பல்வேறு துன்பங்களைஅனுபவித்து வருகின்றார்கள். அவர்களில் பலர் போரினால் ஏற்பட்டு வடுக்கள் இன்னும் மறையாமல் மனங்கள் பாதிக்கப்பட்ட துயரோடு வாழ்ந்து வருகின்றார்கள். அங்கங்களை…
Read More









