தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் – பிபிசி தமிழ் கள நிலவரம்

தோட்டம் முழுவதும் 56 உடல் பாகங்கள், 5 எலும்புக்கூடு துண்டுகள் – பிபிசி தமிழ் கள நிலவரம்

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எலந்தூர் மக்களிடையே நிலவுகிறது. அங்குள்ள கள நிலவரத்தை வழங்குகிறது பிபிசி தமிழ். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவல் சிங்கின் வீடருகே நாம் முதலில் சந்தித்த பெயர் வெளியிட விரும்பாத திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாஃபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார். “முதலில் ஷாஃபியின் வேண்டுகோளுக்கிணங்க சென்றிருக்க வேண்டியது நான் தான். என்னிடம் ஒரு…

Read More

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்

மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, மோசடி வழக்கு ஒன்றில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பின் ஆங் சான் சூகி வீட்டுக்…

Read More

அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்

அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்

இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்காவில் தாமதம் ஏற்படுவதாகவும் , இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா சென்ற அவர் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; என்னுடைய அமெரிக்க பயணம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா -அமெரிக்க உறவு உலகம் தழுவிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரு நாட்டு உறவு மிக முக்கியமானதாகும். அமெரிக்க விசா நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும், பல இந்திய மாணவர்கள் அமெரிக்க விசா கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு…

Read More

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் இன்று இரவு புதுடில்லி திரும்பினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு இன்று (செப்.,27) நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.02) ஜப்பான் சென்றார். அங்கு நடந்த இறுதி சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.பின்னர் பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்தித்தார். ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு இன்று நள்ளிரவில் புதுடில்லி திரும்பினார். பிரதமர் மோடி.

Read More

இந்தியா செய்தி முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

இந்தியா செய்தி  முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, ‘வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை,…

Read More

ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு

ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு

தற்போது போருக்கான காலம் அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும், உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரம் தொடர்பாக விவாதித்த போது, புடினிடம் தற்போது போருக்கான காலம் இதுவல்ல என மோடி வலியுறுத்தினார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது: தற்போது போருக்கான காலம் இதுவல்ல என,…

Read More

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சர்ச்சை கருத்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்சிநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ.விலிருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசாரிடம் ஒப்படைக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா…

Read More

நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய

நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய

வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர். இதை தொடர்ந்து ஜூலை 13ல், அதிபர் கோத்தபய ராஜபக்சே தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.பின் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான…

Read More

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல்

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. சென்னை, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், வக்கீல்…

Read More

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாடநுால் கழகத் தலைவர் லியோனி, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ‘ஹிந்து மதத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்ற மணி விழா நிகழ்ச்சியின் போது, தம்பதியை மணிக்கணக்கில் அமர வைத்து ஹோமம் நடத்துவர். ‘அப்போது, புரியாத மந்திரங்களை சொல்லி, அவர்களை இம்சை செய்வர். ௬௦ ஆண்டுகளாக பட்ட துன்பம் போதாதென்று, இந்த தொல்லை வேறா என்று, கணவருடன் மனைவி சண்டை போடுவார்’ என, குதர்க்கமாகப் பேசி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார், ஆபாச பேச்சாளர் என பெயர்…

Read More
1 37 38 39 40 41 181