ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா ? இந்தியா என்பது, 28 மாநிலங்களும் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களும் சேர்ந்த, 543 லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 250 ராஜசபா(upper house) பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 140 கோடி மக்கள் தொகையையும் கொண்ட ஜனநாயக நாடு ! இதில், 39 லோக்சபா உறுப்பினர்களையும் மற்றும் 18 ராஜசபா உறுப்பினர்களையும் மற்றும் 8 கோடி மக்கள் தொகையில் 6.5 கோடி தமிழர்களை கொண்டது தான் தமிழ்நாடு ! இந்தியாவின் தேசிய இறையாண்மையை பாதிக்கும் விடையமாக,…

Read More

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்த பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு…

Read More

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க – – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், ‘இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு’ நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும் வலிமையைப் பெற்றுள்ளது. உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா – அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்த நாடும், ராணுவ பலத்தில்…

Read More

சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நான்கு ஆண்டு தண்டனை காலம், 2021 பிப்ரவரியில் முடிகிறது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு…

Read More

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார். இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார்….

Read More

மதுரை 2ம் தலைநகர் ஆகிறதா ? தமிழகத்தில் அமோக ஆதரவு !!

மதுரை 2ம் தலைநகர் ஆகிறதா ? தமிழகத்தில் அமோக ஆதரவு !!

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆகஸ்ட், 15ல், நம் நாளிதழில், முழு பக்க கட்டுரை வெளியானது. இந்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தமிழ் வளர்த்த வரலாற்று பெருமைக்குரிய மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் அமைக்க, எங்களின் முழு ஆதரவு உண்டு. உலகின் எட்டாவது அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் உள்ளது. மதுரையை சுற்றி பசுமை சூழ்ந்த ஏராளமான கிராமங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சிக்குரிய நிறைய நிலப்பரப்புகள், நான்கு வழிச்சாலை போக்குவரத்து என, அனைத்து வசதிகளும் உள்ளன.தென் மாவட்டங்களில் தொழில்…

Read More

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் கே. அண்ணாமலை அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று கூறினார். “தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன். உண்மையான வீரான எல். முருகன் தலைமையில் மாநிலத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் எனது பணிகளையும் முழு நேரத்தையும் செலவிடுவேன்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார். “நான் நரேந்திர மோதியின் மிகப்பெரிய ரசிகர். தேசிய பாதுகாப்பிலோ, ஊழலிலோ சமரசத்துக்கு இடமின்றி வலுவுடன் நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோதி….

Read More

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தமிழக அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதையொட்டி, நேற்று நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, தி.மு.க.,வை கிழித்தெடுத்தார். இதைக் கருத்தில் கொள்கையில், தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது என்பது தெளிவாகிறது. அதே நேரம், காங்கிரஸ் மேலிடத்தில் நிலவும் குழப்பத்தால், தமிழக காங்., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி குழப்பம் நீடித்தால், தி.மு.க.,விடம் அதிரடியாக பேரம் பேசி, ‘சீட்’ வாங்குவது கடினம் என்றும் வருத்தப்படுகின்றனர். நேற்றைய சம்பவங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில், கூட்டணி வியூகம் வகுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதைக் காட்டுகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, எட்டு மாதங்களே உள்ளதால், கொரோனா பரவலுக்கு மத்தியிலும்,…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் பெயரை கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.   கடந்த சில தினங்களுக்கு முன் ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று குடியரசு கட்சி தேசிய குழு கூட்டம் நடந்தது. இதில் இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் ஆகிய இருவரின் பெயரையும், குடியரசு கட்சி தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக…

Read More

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா  ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழின் தலைநகராக மதுரையை அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும். மதுரை தமிழ் அன்னையின் பூமி. சங்கம் வளர்த்து தமிழ்கண்ட பூமி. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லை. 60 ஆண்டுகளாக தமிழின் பெயரை சொல்லி ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு, தமிழுக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்தபோது மதுரையில் பிரமாண்டமான தமிழன்னை சிலை அமைக்க வேண்டும் என்றார். ஜெ.,யின் கனவை நிறைவேற்ற, தற்போதைய அரசு மதுரையில்தமிழன்னை…

Read More
1 67 68 69 70 71 181