ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொது செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்த சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து , அவருக்கு பதிலாக கட்சி சட்டதிட்ட விதி18, 19 பிரிவுகளின் படி இளைஞர் அணிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதியை பொறுத்தவரை அவர் முதலில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும்,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம்…

Read More

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி முகர்ஜிக்கு டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.305 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தருவதற்காக ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாடு முதலீடுகளை பெற்ற அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது…

Read More

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ராகுல் இன்று முறைப்படி ஒப்படைத்தார். விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் ராகுல் தனது அறிவிப்பில் கூறி இருந்தார். ராகுல் ராஜினாமாவை அடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக மூத்த தலைவரான மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் 2 முறை ம.பி., முதல்வராக இருந்துள்ளார். உ.பி., கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.

Read More

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 30 ம் தேதியன்று இரவு டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள இந்து கோயில் மர்மநபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து கோயில் இடிப்பு, அதன் தொடர்ச்சியாக நடந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து அமித்ஷா நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் டில்லி கமிஷனர். அவரிடம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் அமித்ஷா. அத்துடன் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை

இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் பாரிய தொடர்பு காணப்பட வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஒரு நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு அசம்பாவித…

Read More

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்

இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காஷ்மீர் மாநிலம் செல்கிறார் அமித்ஷா. இந்த பயணத்தில் அவர் அமர்நாத் புனித யாத்திரையும் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மேடி, உள்நாட்டு பாதுகாப்பு முழுமையும் கையாளும் வகையில் அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதனால் தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் அமித்ஷாவிடமே அறிக்கை அளிக்க செய்துள்ளார். எனவே, 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு, அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான், வரும் ஜூன் 26 மற்றும் 27 காஷ்மீருக்கும், அதே பயணத்தில் அமர்நாத்திற்கும் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு…

Read More

தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டம்

தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டம்

கடனுக்கு வட்டி கட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி யில் இடம் பெற்ற, தே.மு.தி.க., நான்கு தொகுதி களில் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உட்பட 4 பேரும், படுதோல்வி அடைந்தனர். தேர்தல் நேரத்தில், செலவுக்கு பணம் இன்றி, தே.மு.தி.க., வேட்பாளர்கள் திணறினர். திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன், வட சென்னையில் போட்டியிட்ட மோகன்ராஜ் இருவரும், விஜயகாந்த், பிரேமலதா விடம் நேரில் முறையிட்டனர்.ஆனாலும், நிதி வழங்க, அவர்கள் மறுத்து விட்டனர்.தேர்தலில் செலவு செய்யாத தால், கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்து உள்ளதாமாவட்ட செயலர்கள் கூறி வருகின்றனர். கட்சியின்…

Read More

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுரா மாநிலத்தில் உள்ள உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா கூறி இருப்பதாவது: மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம்,ஐகோர்ட் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றும் திட்டங்கள் தொடங்கி வருகிறது. மேலும் அசாம்…

Read More

ஹேமமாலினி பதவிப்பிரமாணம்: ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு”

ஹேமமாலினி பதவிப்பிரமாணம்: ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு”

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு” என பதவி ஏற்பின்போது முழக்கமிட்டபடி பதவி ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற போது விதவிதமாய் முழங்கிய நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி தனி வழியில் முழங்கியது மற்ற எம்.பிக்களை விட வித்தியாசப்பட வைத்தது.

Read More

பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது

பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது

பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன. முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக அளவில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தேவையான அனைத்து சிகிச்சைகளும் துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். முதல்வர் நிதிஷ்குமார், தொடர்…

Read More
1 89 90 91 92 93 181