கிறிஸ்தவருக்கு திருமலை பதவி: இந்துக்கள் கொந்தளிப்பு

கிறிஸ்தவருக்கு திருமலை பதவி: இந்துக்கள் கொந்தளிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக கிறிஸ்தவரும் தாய்மாமாவுவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்களின் புனிதத்தலமான திருமலை தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்தவர் நியிமிக்கப்படுவது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெகன் மோகனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர். அவரது தாய்மாமாவான சுப்பாரெட்டியும் கிறிஸ்தவர் என தகவல் வெளியானது. ஆனால், இதனை சுப்பாரெட்டி மறுத்துள்ளார். சுப்பாரெட்டியின் நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டுவிட்டர்வாசி ஒருவர், சர்ச் அல்லது வாடிகன் பொறுப்பில் ஹிந்து ஒருவரை தலைவராக நியமிக்க முடியுமா ? அது முடியாத போது, ஹிந்து கோவிலில் கிறிஸ்தவரை நியமிப்பது ஏன்?…

Read More

“தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) மோடி – அமைச்சர் மனோ கணேசன்

“தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) மோடி – அமைச்சர் மனோ கணேசன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள். இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, “தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் – இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது. பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு…

Read More

காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?

காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?

டில்லியில் காங்., தலைவர் ராகுல் வசித்து வந்த எம்.பி., பங்களா, காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., தலைவர் ராகுல் கடந்த 2004ம் ஆண்டு முதல் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். அப்போது டில்லி, துக்ளக் லேன் பகுதியில் உள்ள 12ம் எண் பங்களாவில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. எட்டாவது டைப் பங்களாவான இது உச்சபட்ச பாதுகாப்பு வசதி கொண்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தற்போது வரை அந்த பங்களாவே ராகுலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 2019 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோற்றபோதும், வயநாடு தொகுதியில் வென்று லோக்சபாவுக்கு தேர்வாகியிருந்தார். இந்நிலையில், லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில். ராகுல் வசித்து வரும் பங்களா காலி…

Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்றைய தினம் சென்று, இலங்கைக்கு இன்று அடுத்த கட்டமாக விஜயம் மேற்கொண்டிருந்தார். சுமார் ஐந்து மணி நேரம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும்…

Read More

திமுகவினர் பள்ளிகளில் இந்தி: எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி

திமுகவினர் பள்ளிகளில் இந்தி: எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி

இந்தியை கற்க சொல்லும் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அரசியல்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக இந்தியை எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா அவரது டுவிட்டரில் ; திமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டி கொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று ?அவரது டுவிட் வருமாறு ; @HRajaBJP அரசு பள்ளிகளில்…

Read More

திரிணாமுல் காங்., உடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் – மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்., உடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் – மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் ரம்ஜானை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மம்தா, எங்களுடன் மோதுபவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சூரியன் உதிக்கும் போதும் மிக பிரகாசமாக தான் இருக்கும். பா.ஜ.,வும் அது போல தான் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி பிரகாசமாக உதித்துள்ளது. ஆனால் வந்தபடியே அவர்கள் வீழ்ந்து விடுவார்கள். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி அதன் மூலம் வெற்றி பெற்றவர்கள், விரைவில் காணாமல் போய் விடுவார்கள். ஹிந்துக்கள் நம்பிக்கையின் பக்கம் நிற்கிறார்கள். இஸ்லாமியர்கள் நேர்மையின் பக்கம் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அன்பின் பக்கமும், சீக்கியர்கள் தியாகத்தின் பக்கமும் உள்ளனர். இது தான் எங்களின் அன்பிற்குரிய ஹிந்துஸ்தான். நாங்கள் அதனை பாதுகாப்போம் என்றார். மம்தாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கும்…

Read More

பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்

பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பாஜக எம்.எல்.ஏ. பல்ராம் தவாணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நரோடா பகுதியின் வார்டு பொறுப்பாளர் நிது தேஜ்வானியை எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. பல்ராம் தவாணியின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து நிது தேஜ்வானி தலைமையில் பெண்கள் சிலர் பால்ராம் தவாணின் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நிது தேஜ்வானியிடம் பால்ராம் தவாணி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நிது தேஜ்வானி தனது தங்கை போல என்றும் அவருக்கு எப்போது எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்றும் பால்ராம் தவாணி தெரிவித்துள்ளார்.

Read More

உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி

உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றிப்பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இதனை 2014 தேர்தலில் செய்தது. அங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதா மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இதனால் பா.ஜனதாவிற்கு பின்னடைவாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இருப்பினும் பா.ஜனதா கட்சி மோடி அலையில் வெற்றியை தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சி முன்பு போல் 71 தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் 7 தொகுதிகளை மட்டும் இழந்து 64 தொகுதிகளை தன்வசப்படுத்தியது….

Read More

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென். பார்த்து கைதட்டி ரசித்தார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக  2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக, நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்…

Read More

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று (மே 30) காலை நீட்டித்தது. இவ்வழக்கில் கார்த்திக்கு எதிராக அப்ரூவராக மாற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் எந்நேரமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Read More
1 90 91 92 93 94 181