‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்தில் மேற்படி அழைப்பினை விக்னேஸ்வரன் விடுத்துள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என விக்னேஸ்வரன் எழுதியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில்…
Read More









