எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருந்த மேடையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்குபெற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மத்திய அமைச்சர் பேசும் போது பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தின் நீர்தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார். பசுமை வழிச்சாலை குறித்து பேசிய அவர், பசுமை வழிச் சாலை பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது…
Read More









