அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

இந்தியா முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை 2015ம் ஆண்டு, செப்.,ல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக, நடந்த பேச்சில் சுமுக நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறைதான். ஆனால், வங்கிகள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. இதனால், அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வந்தோம்….

Read More

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

 லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரூக் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலுக்கு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறோம். லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள போது, காஷ்மீரில் மாநில தேர்தலை நடத்த மட்டும் ஏற்ற சூழ்நிலை இல்லையா? உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால். போதிய அளவில் பாதுகாப்பு படைகள் உள்ளன. அப்படி இருந்தும் காஷ்மீரில்…

Read More

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை. கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அவரைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறின. பின் இந்த நான்கு கட்சிகளும் தி.மு.க.வின் தோழமை கட்சிகளாகவே செயல்பட துவங்கின.அதனால் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இக்கட்சிகள் வேறு எந்த சிந்தனையும் இன்றி தி.மு.க.வுடன் பேச்சை தொடர்ந்தன. அதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு…

Read More

தேமுதிக: அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும்

தேமுதிக: அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும்

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாகவும், இனி, யாருக்கும் எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்றும், நாங்கள் தேர்தல் பணிகளை துவக்கவுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று அறிவாலயத்தில் வைகோவுடன் கூட்டணி பேச்சு முடிந்த பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில் : தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்துள்ளோம். அதன்படி காங்., 10 , மதிமுக 1 , மா.கம்யூ., இ.கம்யூ, விடுதலை சிறுத்கை கட்சிகள் தலா 2 தொகுதிகளும், கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , ஐஜேகே கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி புதுச்சேரி உள்ளிட்ட மொத்தம் 40 தொகுதிகளில் 20…

Read More

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்கவரி விதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரி விதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால்…

Read More

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி

திமுக- மதிமுக இடையிலான கூட்டணி பேச்சில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்றைய பேச்சில் இவ்விரு கட்சிகளுக்கு இடையே முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவொரு முடிவும் ஏற்படவில்லை. வைகோவும் அவர்களின் கட்சி நிர்வாகிகளும் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு நடத்துவார்கள் என கூறப்பட்டது. ஆனால் முக்கிய பேச்சு எதுவும் நடக்கவில்லை.இன்றைய பேச்சில் விடுதலைசிறுத்தை , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்தன. மதிமுக தரப்பில் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படுவதால் திமுக தர்மச்சங்கடத்தில் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் காலையில் இருகட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஆகி விட்டதாகவும், மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் சில நிமிடங்களில் மதிமுக…

Read More

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது….

Read More

இந்திய குண்டுவீச்சு விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்

இந்திய குண்டுவீச்சு விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்

பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள பலகொட் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை பூகம்பம் போன்ற சத்தத்தினால் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தனர்.எனினும் பின்னர் அவர்களிற்கு அது இந்திய விமானப்படையின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட சத்தம் என்பது தெரியவந்தது.இந்திய அதிகாரிகள் இந்த தாக்குதல் காரணமாக காஸ்மீரில் 40 படையினர் கொல்லப்படுவதற்கு காரணமான தீவிரவாத அமைப்பின் முகாமை அழித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். 1971ற்கு பின்னர் பாக்கிஸ்தானில் உள்ள பகுதியொன்றில் இந்தியா முதல்தடவையாக மேற்கொண்ட விமானதாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்எனினும் இந்த தாக்குதலில் ஒருவரே காயமடைந்துள்ளார் என குறிப்பிடும் கிராமத்தவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். அருகில் தீவிரவாத அமைப்பினால் நடத்தப்படும் மத்ரசா ஒன்று உள்ளது…

Read More

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில்

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில்

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்தியா – பாக்., இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது நிலவும் பதற்றமான சூழல் குறித்து பேட்டி அளித்துள்ள அருண் ஜெட்லி, இன்றைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க படைகள் பாக்.,கிற்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அழித்தது போன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்றார். இந்திய எல்லைக்குள் அத்துமீறி…

Read More

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் என்பவர் மாயமானார். அவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறி சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் உறுதித்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதும், அதற்கு…

Read More
1 97 98 99 100 101 181