கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு…

Read More

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ‘இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இப்படியொரு, தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை’ என, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை, முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களின் பண்டிகை தினமான, ஈஸ்டர், உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அண்டை நாடான, இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு வழிபாடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்கள், கூட்டம் கூட்டமாக, குடும்பத்துடன் வந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.தலைநகர்…

Read More

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – உடன்படிக்கை கையெழுத்து

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – உடன்படிக்கை கையெழுத்து

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது. மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களினால் 2030ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் மின்சார தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இந்த முதலாவது சூரிய மின்சக்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது….

Read More

“இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு”: மனித உரிமை ஆணைக் குழு

“இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு”: மனித உரிமை ஆணைக் குழு

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திரிகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய…

Read More

போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு

போதை மருந்து கடத்தல் குறையுமா? இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி திட்டமொன்றை முன்னெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ராவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பிராந்திய பாதுகாப்பிற்காக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பின் மூலம் இணக்கப்பாடுடன் செயற்படுவது குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…

Read More

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் கண்டனம்

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரஊப் ஹக்கீம்; “யுத்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்கப்படும் என்பதில், அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போது; “முஸ்லிம் தலைவர்கள்…

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசாங்கத்தால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமானால், தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன், அந்த…

Read More

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஜெனீவா மனித உரிமை அமர்வு தொடர்பில் அவர் கருத்தை வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் 21 அன்று உறுப்பு நாடுகள்…

Read More

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணி விரைவாக நடைபெற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலுமை உண்டு என்று அவர் கூறினார். செப்டம்பர் மாதம் முடியும் முன் வடக்கின் ஐந்து…

Read More

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது : என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றுத. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழினத்தின் மீதான் போர்குற்றங்களுக்கும், இனப்ப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றதோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம் என்றும், அதுதான் தமது நிலைப்பாடும் எதிர்பார்பும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மாணிக்கவாசகர், அதனை நோக்கிய தமது செயற்பாடு இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின்…

Read More
1 15 16 17 18 19 45