பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜெனிவா நோக்கி செல்லும் சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஊர்தி

பிரான்ஸ் நாட்டிலிருந்து  ஜெனிவா நோக்கி செல்லும் சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட  முக்கியத்துவம் வாய்ந்த ஊர்தி

ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரி பிரான்சில் இருந்து தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பொறிக்கப்பட்ட ஊர்தி பயணிக்கவுள்ளது. இந்த ஊர்தியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கடந்த எழுபத்தொரு ஆண்டுகளாக இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நிழற்படங்களாக பொறித்தும் அந்த இனப்படுகொலைக்கு தலைமையேற்ற இலங்கை அரச தலைவர்களின் விபரங்கள் புகைப்படங்கள் பொறித்தும் இந்த தமிழின நீதி கோரும் ஊர்தி ஐநா நோக்கி செல்ல இருக்கின்றது. மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளான எதிர்வரும்…

Read More

மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரின் கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும், பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடும்.அது வேண்டாம். மறந்து விடுவோம். மன்னித்து விடுவோம் என்று கூறியுள்ளார். “அதாவது உங்களுக்கு நாங்கள் வடகிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஸ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம்.” “பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள்….

Read More

பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும். இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ‘எழிலன்’ எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவிதான் அனந்தி சசிதரன். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,…

Read More

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய…

Read More

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின்…

Read More

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள் காப்பாற்றியே ஆகவேண்டும்

தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய  இரண்டு தாயகங்களையாவது உலகத் தமிழர்கள்  காப்பாற்றியே ஆகவேண்டும்

கவிஞர் காசி ஆனந்தன் கூறுகின்றார்   “தமிழர்கள் தங்களுக்கு உலகில் இன்னமும் இவ்வளவு பெரிய கடந்த கால பேரழிவிற்குப் பின்பும் இரண்டு தாயகங்கள் இன்னும் தங்கள் கைகளில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு, தமிழீழம் என்ற அந்த இரண்டு தாயகங்களையாவது தாங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு செயல்படவேண்டும் என்று நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.” மேற் கண்டவாறு கூறுகின்றார் கவிஞர் காசி ஆனந்தன். எமது போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையுடனும் கைகளில் எழுதுகோலுடனும் ஒரு காலத்தில் உணர்வோடு பவனி வந்த “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன், தற்போது தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். இறுதிக் காலத்தில் வன்னிக்கு வருமாறு தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்திருந்தும், கவிஞருக்கு…

Read More

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல்  வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

வலிகாமம் வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை தமது காணிகளுக்குச் செல்லவந்த காணிஉரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை அன்றைய தினம் மீளமக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார். இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்கள் காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும்…

Read More

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல:   –  சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம்…

Read More

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை – கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

அடுத்த கட்டம் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிரமப்படும்  தமிழ் தேசிய கூட்டமைப்புத் தiiமை  –  கொழும்பிலிருந்து பாலச்சந்திரன்

இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிரக்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு நேர்முரணாக விக்கிரமசிங்கவை தங்களது நலன்களிலும் அக்கறைகளிலும் அனுதாபம் கொண்டவராக தமிழர்கள் நோக்குகிறார்கள். ராஜபக்சவை ஆட்சியதிகாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதற்கு கூட்டமைப்பு அதனால் இயன்ற சகலதையும் செய்யவேண்டியிருக்கிறது. ஆனால்,…

Read More

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் சுகந்தி!!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல்   சுகந்தி!!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் நாளை 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டத்தை வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கை சகோதர ஊடக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.திருமலையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
1 17 18 19 20 21 45