ஜேவிபியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது என்கிறார் அனுரகுமார திசநாயக்க
ஜேவிபியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்றும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது எனவும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன. அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள கட்சிகள் இணைந்து பணியாற்ற முடியும். சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும். ஜேவிபியிடம் இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை. இவ்வாறான வெளிப்படை தன்மை…
Read More






