ராஜபக்சேவுக்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை

ராஜபக்சேவுக்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா. அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார். மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க…

Read More

முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை

முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய…

Read More

ரணில் தான் பிரதமர் என்கிறார் சபாநாயகர் இலங்கையில் தொடரும் பொம்மலாட்டம்

ரணில் தான் பிரதமர் என்கிறார் சபாநாயகர் இலங்கையில் தொடரும் பொம்மலாட்டம்

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, 67, ரணில் விக்கிரம சிங்கேவின், 69, யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற, சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். இந்தாண்டு, இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான, இலங்கை சுதந்திர முன்னணி, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், அடுத்த பொதுத் தேர்தலில், ராஜபக்சேவின் கை ஓங்கும் நிலை உருவானது. இதை அடுத்து, விக்கிரமசிங்கே விடம் இருந்து, சிறிசேன, விலகத் துவங்கினார். அதன் தொடர்ச்சியாக, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில்…

Read More

இலங்கை தென்கிழக்குப் பல்கலை.: நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது

இலங்கை தென்கிழக்குப் பல்கலை.: நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது

கடந்த இரண்டு வார காலமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த அக்கரைப்பற்று போலீஸார், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்திருந்த, 15 சிங்கள மாணவர்களையும் கைது செய்து, பல்கலைக்கழக பேருந்தில் அழைத்துச் சென்றனர். பகடி வதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதோடு, சிலருக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மாணவர்களை மீண்டும் இணைத்துக்…

Read More

தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்

தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்

“தமிழ் மக்கள் கூட்டணி” என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்திருந்தால் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என தெரிவித்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு…

Read More

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக…

Read More

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ என்னை கொல்ல சதி செய்கிறது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று, வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘ இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொல்ல சதி செய்கிறது. ஆனால், இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியாது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முழுமையாக தெரியாது. அது போல தான் இது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்….

Read More

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…

Read More

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அக்டோபர்.31ஆம் தேதிக்குள் அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

Read More

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர். இதன்போதே, 10 அரசியல் கைதிகளும் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது….

Read More
1 23 24 25 26 27 45