இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை
இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை. இந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பிபிசியிடம் தெரிவித்தார். பெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன. ஆடு, கோழி, எருமைக் கன்றுகள் இவ்விழாக்களில்…
Read More









