டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் நேற்று உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள உலக்குடியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி(27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம்…
Read More