உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்

ஆந்திராவில் ஊரடங்கால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read More

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர்  டிரம்ப் நிறுத்தினார்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார். டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம்,…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்…

Read More

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் தற்போது கொரோனா குறித்த ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் 600 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இன்னும் உறுதி செய்யப்படாத இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை. இவர்கள் என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை பெறவில்லை என்பதால் இவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிகர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்.,3ம் தேதி வரை 4,100 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.217 பேர்…

Read More

இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

தேவ ரிஷி நாரதர் மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்குமிந்த ரகசியத்தை வெவேறு யுகங்களில் பலருக்கு சொல்லிக்கொடுத்தார். பல சிரார்களுக்கும் சொல்லித்தந்தார். இந்த வீடியோவில் நாரதரின் சிஷ்யரான அசுர சக்கரவர்த்தி ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி மரண பயத்தையும்…அகால மரணத்தையும் வென்றானென்பதை நீங்களே பார்க்கலாம். நரசிம்ஹ அவதாரத்தில் விஷ்ணுவையே அழைத்து வந்து நீதியை நிலைநாட்டிய பக்த ப்ரிஹலாதனின் முழு வரலாறும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தயவுசெய்து குழந்திகளிடமும், குடும்பத்தாரிடமும் , நண்பர்களுடனும் ..நண்பர்களுடனும் பகிர்ந்து பயனடைய உதவுங்கள் !! “ஓம் நமோ பகவத வாசுதேவயா” என்று ஜெபம் செய்து மரண பயத்தை அழித்து பகவன் நாராயணனுக்கு மிகவும் பிரியமானவராக மாறலாம் !! தினமும்…

Read More

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே !! எங்குமே அழகு. எங்குமே மகிழ்வு. எங்குமே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று. ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம் ஏற்றம் பல கொள்வோம். தமிழ் புத்தாண்டு !! தமிழர் புத்தாண்டு !! திரு முருகன் அருள் பெற்று தீங்கின்றி வாழ்க !! தமிழன்னை ஆசியுடன் ஆண்டு பல வாழ்க !! செல்வா செழிப்போடு நீடுழி வாழ்க !! குன்ற உடல் நலத்துடன் என்றென்றும் வாழ்க !! வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!

Read More

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு…

Read More

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி மன்னர் குடும்பத்தி்ல், உயர் பதவியில் உள்ள 12 பேர் உள்பட அரண்மணையில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கொரோனாவுக்க 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியில் உள்ள 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ரியாத் மாகாண கவர்னராக உள்ள பைசல் பின் பந்தர் அப்துல்லஜீஸ் அல் சவுத், என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து…

Read More

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141 பேர் உயிரிழந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது. அவர்களை அனுமதித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்’ என, மெக்சிகோ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியுள்ளது. இந்நிலையில், தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிற்பித்தார். அந்த நகரில் வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.இதனால், போதைப் பொருட்களை கடத்த முடியாமல் தவித்த ஒரு கும்பல், மேயரைக் கொல்ல…

Read More

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இளவரசர் சார்லஸ் நோயின் பிடியில் சிக்கி குணமடைந்துள்ளார். நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சஸ் நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நோய் இங்கிலாந்து மக்களை பெரிதும் பாதித்துள்ளது. செல் போன் வளர்ச்சியின் தற்போதைய கட்டமான 5 ஜி தொழில்நுப்டத்தை பல்வேறு நிறுவவனங்கள் இங்கிலாந்தில் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கொகேரானா வைரசை 5 ஜி-யை இணைத்து ஒரு செய்திபரவியது. அதாவது 5 ஜி செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி விடுவதாக செய்தி பரவியது. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த இங்கிலாந்து மக்கள் 5 ஜி…

Read More
1 139 140 141 142 143 256