பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன்,…

Read More

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 30) இவர் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த…

Read More

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

திருவண்ணாமலை, தீப திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீபதிருவிழாவில், 10ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள, ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தை மாதத்தில் நடக்கும்திருவூடல் திருவிழா மற்றும் மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என,…

Read More

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி உள்ளது.     ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் கிரேட்டா இடம் பெற்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். பருவ நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் குரல் எழுப்பத் தயங்காதவர் கிரேட்டா. செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா., கூட்டத்தில் 2018 ம் ஆண்டு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது…

Read More

ஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்

ஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்

புதிய தலைவரை தேர்ந்தெடுத்ததும், தாம் கன்செர்வ்டிவ் பார்ட்டி தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக இன்று ஆண்ட்ரூ ஷியர் அறிவித்தார். வெல்ல வேண்டிய 2019 எலெக்ஷனை சரியாக போட்டியிடாமல் லிபெரல் பார்ட்டி தலைவர் ஜஸ்டின் த்ருதீவிடம் தோற்றதாக அவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதனால் கட்சியில் யாரும் சந்தோஷத்தை வழிபடுத்தாவிட்டாலும் வருத்தத்தையும் வெளிப்பதுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. SNC லவ்லின் வூழல் மற்றும் மோசமான குடிவரவு கொள்கை மேலும் தீவிரவாதிகளிடம் மெம்மை போக்கு போன்ற பல குற்றங்களை சுமந்திருந்த லிபரல் கட்சி தலைவர் மற்றும் கனடியன் பிரதம…

Read More

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

ஜெர்ரி நாட்லர் தலைமையிலான அவை நீதிக்குழு வெளியிட்ட குற்றச்சாட்டின் முதல் பிரிவு டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகிறது. அடுத்த பிரிவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை தடுத்ததாக கூறுகிறது. அத்துடன் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக யுக்ரைனுக்கான உதவியை நிறுத்திவைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுக்கும் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையே ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிறார். அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு இந்தக் குற்றச்சாட்டுகளை அங்கீகரித்துவிட்டால், இந்தவாரக் கடைசியில் இது பிரதிநிதிகள் சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். இந்த அவையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் அதிகம். அங்கே இந்த குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால், பிறகு அவை ஆளுங்கட்சியான…

Read More

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது. ‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று…

Read More

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. வெளிநாட்டு தேர்தல் ஒன்று என்ற போதிலும், அதனுடன் தொடர்பில்லாத மக்கள் மத்தியில்கூட இதனால் பிரச்சனை எழுந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைக்கு ‘இரண்டு நாடுகளுக்கிடையிலான தீர்வு” (two-state solution) என பிரிட்டனை ஆளும் கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளதாக அவர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக சுட்டிக்காட்டினார். ”பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

Read More

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி , பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவன் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவன் என்றும் தெரிய வந்தது.   லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன்…

Read More

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்கள் சிலர் அந்த மர்ம மனிதனை பார்த்து அலறியடித்து ஒடினர். தகவலறிந்த ஆயுதமேந்திய ரோந்து போலீசார் அந்த மர்ம மனிதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது. மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர்…

Read More
1 152 153 154 155 156 256