திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள். இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை…

Read More

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது. கடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின்…

Read More

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு…

Read More

Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt

Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt

Scarborough-Agincourt, the Federal Riding,has been a Liberal’s Stronghold one and it is for ever. Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt, by winning the By-Election, took place yesterday. Scarborough-Agincourt’s former MP Hon Jim Karigiannis has been a very successful MP of the riding for more than 25 years. And then late Mr. Arnold Chan was elected and he served for two years. He died…

Read More

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

டெல்லி விமான நிலையத்தில் மகளை பார்ப்பதற்காக போலியான டிக்கெட்டுகளுடன் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனைய கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிடித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காபூல் நகருக்கு சென்ற தங்களது மகளை பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலைய முனையத்திற்குள் அவர்கள் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த தம்பதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து விதிகளின்கீழ்…

Read More

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, இதனால் அமைதி கெடாது. இது அமைதி உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உண்மையை அங்கீகரிப்பது என்பது அமைதியின் பொருள். அதுவே அமைதியின் அடிப்படையாகும் என கூறினார். தொடர்ந்து அவர், அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய அமைதிக்கான ஒப்புதலை…

Read More

திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் முன்னாள் ஆசிரியையும் கனடாவில் கடந்த 13வருடங்களாக பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் நல்ல தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொண்ட பல மாணவ மாணவிகளை உருவாக்கிவருகின்றவருபவருமான திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாளை அனைவரும் தரிசித்தோம். அவரது பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருநதினராக முன்னாள விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.அருட்கவி திரு ஞானகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கனடா உதயன் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்…

Read More

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce, took place today at Princes Banquet Centre in Scarborough. The President of Canadian Tamil Chamber of Commerce, Mrs Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event. All the Gifts, given to Children, were sponsored by Mr. Raj Nadaraja, a Prominent Realtor. This was a very remarkable event for…

Read More

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

கனடாவில் “பிறைசூடி” என்னும் பெயரில் கட்டுரைகளை எழுதி வருகின்றவரும் கடந்த பல ஆண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வருகின்றவருமாகிய திரு சந்திரசேகரனின் தாயார் திருமதி பாப்பு அம்மாள் திருச்சியில் காலமானார் என்ற செய்தியை அவரது நண்பர்களின் அறிதலுக்காக இங்கே பதிவு செய்கின்றோம். இலங்கையில் மலையகத்தில் நுவரேலியா மாவட்டம் ராகலையில் வாழ்ந்து வந்த பாப்பு அம்மாள் பின்னர் திருச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சியில் இடம்பெற்றன. அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் திரு சந்திரசேகரனை 416 996 4366 என்னும் இலக்கத்தில் அழைக்கலாம்.

Read More

‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு, ஐ.எஸ்., அல்-கொய்தா எச்சரிக்கை

‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு, ஐ.எஸ்., அல்-கொய்தா எச்சரிக்கை

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்-கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது. முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்…

Read More
1 217 218 219 220 221 256