தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 14 இலங்கை அகதிகள் பாதுகாப்பற்ற படகு பயணத்தின் மூலம் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர். இலங்கைக் கடற்படையினர், இவர்களைக் கைதுசெய்து, காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாக்குமூலங்களைப் பதிவுசெய்த போலீசார் 14 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் இவர்களை விடுத்த பின்னர், குறித்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். முறையான வேலைத் திட்டம் இருக்கும் போது குழந்தைகளுடன்…
Read More








