சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்து வென்று காட்டிய தனுஷ்
வைத்திருந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, பாலிவுட் சென்று அங்கும் வெற்றியடைந்து, தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய, ஆதரித்த கதாநாயகர்கள் யார் யாரென்று பார்த்தால், பெரும்பாலும் அவர்கள் வெள்ளையாக இருப்பார்கள், சிரத்தை எடுத்து கட்டிக்காத்த உடல்வாகுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள், சுண்டி இழுக்கும் ஆளுமைகளாக இருப்பார்கள். ஆனால், ரஜினியைப் போலவே, மேலே குறிப்பிட்ட கதாநாயகனுக்கான எந்த இலக்கணுமும் இல்லாமல், ஆங்கிலத்தில் a-boy-next-to-door என்பார்களே அப்படி நமது பக்கத்து வீட்டு பையனின் முகச் சாயலுடன், ஆர்ப்பாட்டமில்லாத, மெனக்கெடுதலுடன் உடலை வருத்தி கட்டிக் காப்பாற்றிய…
Read More









